மதுரை திருப்புகழ் சபை இணையதளம் துவக்கம்!
ADDED :4161 days ago
மதுரை: மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வளாகம், தெற்காடி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீதிருப்புகழ் சபையில் http://www.maduraithiruppugazhsabai.com/ என்ற இணையதள துவக்கம் 18-05-2014 அன்று மாலையில் நடைபெற்றது.திரு. எம் சாமிநாதன் போர்ட்டிரஸ்ட் பொறியாளர் அவர்கள் தலைமையில், அருப்புக்கோட்டை ரோடு R.L.Institure of Nautical Science முதல்வர் எம். சுப்பிரமணியன் அவர்கள் இணையதளத்தை முறையாக துவக்கி வைத்தார்கள். சிறப்பு விருந்தினராக திரு. ஓ.எம். எஸ்.எஸ்.பி சிவா கொலம்பஸ் அவர்கள் கலந்து கொண்டார்கள். ஆன்மிகமும் அறிவியலும் என்கிற தலைப்பில் முன்னாள் முதல்வர் திரு.மு. அருணகிரி உரை நிகழ்த்தினர். செயலர் திரு. K.T.கிருபா சங்கர் வரவேற்றார்கள். சபை பொருளாளர் திரு. செந்தில் சுப்பிரமணியன் அவர்கள் நன்றி கூறினார்கள். திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.