உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி அழுக்கு சாமியார் கோவிலில் ரங்கசாமி வழிபாடு!

பொள்ளாச்சி அழுக்கு சாமியார் கோவிலில் ரங்கசாமி வழிபாடு!

புதுச்சேரி: தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, முதல்வர் ரங்கசாமி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர், பொள்ளாச்சி அழுக்கு சாமியார் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். லோக்சபா தேர்தலில், என்.ஆர்.காங்., வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி, ராதாகிருஷ்ணன் ஆகியோர், பொள்ளாச்சி வேட்டைகாரன் புத்தூரில் உள்ள அழுக்கு சாமியார் கோவிலில், சிறப்பு வழிபாடு நடத்தினர். அவர்களுடன், வாரிய தலைவர் பாலன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.  அதைத் தொடர்ந்து, சேலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோவிலிலும் முதல்வர் சுவாமி தரிசனம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !