உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் பூப்பல்லக்கு வீதிஉலா

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் பூப்பல்லக்கு வீதிஉலா

குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 30–ம் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மே  11–ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம், 14–ம் தேதி தேர்வீதி உலா, 15–ம் தேதி  சிரசு ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.  தொடர்ந்து  3 புஷ்ப பல்லக்குகள் வீதி உலாவில்   அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கெங்கையம்மன் மற்றும் உற்சவர் சிலைகள் அமர்த்தப்பட்டு  முக்கிய வீதிகள் வழியாக சென்றது.  பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !