தூத்துக்குடி சித்தி விநாயகர் கோவிலில் மழை வேண்டி பூஜை
ADDED :4162 days ago
தூத்துக்குடி; தூத்துக்குடி புதிய துறைமுகம் பகுதியில் சித்தி விநாயகர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து ருத்ர ஜெபம், ருத்ரஹோமம் நடந்தது. கோவிலில் உள்ள மீனாட்சி அம்மன்– சுந்தரேசுவரர் சுவாமிக்கு 108 லிட்டர் பால், 108 இளநீர் மற்றும் 108 கலசங்கள் ஆகியவற்றால் அபிஷேகம், கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.