வீரட்டானேஸ்வரர் கோவிலில்.. வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை!
ADDED :4159 days ago
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்றுமுன்தினம் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. வராகி அம்மன் ஏர்கலப்பை, உலக்கையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.