உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தருமபுரம் ஆதீனத்தில் குருமுதல்வர் குருபூஜை விழா!

தருமபுரம் ஆதீனத்தில் குருமுதல்வர் குருபூஜை விழா!

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் ஆதீனத்தில் ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலில் பெருவிழா, குருமுதல்வர் குருபூ ஜை விழா திருநெறிய தெய்வத்தமிழ் மாநாடாக  ஆண்டு தோறும் 11 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இவ்வாண்டு கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய விழாவாக கடந்த 16ம்தேதி திருக்கல்யாணமும், 18ம் தேதி திருத்தேரோட்டம் நடந்தது. அதனை தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெ ற்றது. திருநெறியதெய்வத்தமிழ் மாநாட்டை முன்னிட்டு தினமும் மாலை கருத்தரங்கம், பட்டிமன்றம், சுழலரங்கம், கவியரங்கம், ஆய்வரங்கம், சிந்தனை அரங்கம் நடைபெற்றது. 10ம்திருநாளான இன்று குருஞானசம்பந்தரின் குருமூர்த்திகள் கமலை ஸ்ரீஞானப்பிரகாசர் குருபூஜை திருநாள் நடைபெற்றது. அதனை முன்னிட்டு காலையில் நடந்த நிகழ்ச்சியில் திருப்பனந்தாள் காசிமடத்து இணைஅதிபர் சுந்த ரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் வாழ்த்துரை வழங்கினார்.

ஆதீன கல்லூரி நூலகர் செல்வநாயகம், உதவிப்பேராசிரியர் சிவ ஆதீரை, ந வமணி ஆகியோர் பேசினர். தொடர்ந்து பன்னிரு திருமுறைகள், பதினான்கு சாத்திரங்கள், முத்திநிச்சயப் பேரூரை, திருக்குறள் உரைவளம் ஆகிய விழா மலர்கள் வெளியிடப்பட்டது. தருமபுரம் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலட் சுமி வரவேற்றார். தொடர்ந்து சொக்கநாதப் பெருமான் வழிபாடு நடந்தது. மதியம் 3 மணியளவில் தருமை ஆதீனம் 26 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீல ஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஞானபுரீஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளி சிறப்பு ஹோமம், பூர்ணாஹூதியாகி, ருத்ராபிஷேக ம், மகேஸ்வர பூஜையுடன் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து மாலை 7 மணிக்கு 26வது குருமகா சன்னிதானம் திருக்கூட்டத்து அடியவர்கள் புடைசூழ குருமூர்த்த ஆலயத்திற்கு எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் திருப்பனந்தாள் காசி மடத்து இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம் பிரான் சுவாமிகள், குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள், திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் உட்பட முக்கியஸ்தர்கள் ப லர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !