சூரியனார் கோவிலில் சிறப்பு யாக வழிபாடு!
ADDED :4158 days ago
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோவிலில் சோழர்களால் கட்டப்பட்ட சிவசூரிய பெருமான் கோவில் உள்ளது. இங்கு சூரியபகவான் இடது புறத்தில் உஷா தேவியுடனும், வலது புறத்தில் பிரத்யுஷாதேவியுடனும் இரு கரங்களிலும் செந்தாமரை மலர் ஏந்தி மேற்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இல்லாது நவகிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் நேற்று காலை 10 மணிக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து தனி மண்டபத்தில் உஷாதேவி, சாயாதேவி மற்றும்சூரியபெருமானுக்கு சிறப்பு அபிசேகங்கள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.