திரவுபதியம்மன் கோவில் விழாவில் தருமர் பட்டாபிஷேகம்
ADDED :4160 days ago
மயிலம்: பாதிராபுலியூர் திரவுபதியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தருமர் பட்டாபிஷேகம் நடந்தது. மயிலம் ஒன்றியம் பாதிராபுலியூர் கிராம திரவுபதியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடுகள் நடந்தன. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மகா தீபாரதனையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் இரவு 8 மணி வரையில் பாரதம் படித்தனர். பின்னர் தருமர் பட்டாபிஷேகம் நடந்தது. மலர்களினால் அலங்கரித்த உற்சவர் வீதியுலா காட்சி நடந்தது. மாவட்ட கவுன்சிலர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.