ஈரோடு தங்கமேட்டில் தெப்போற்சவம்!
ADDED :4159 days ago
ஈரோடு: பெருந்துறை தாலுகா, காஞ்சிக்கோவிலை அடுத்த தங்கமேடு தம்பிக்கலை ஐயன் ஸ்வாமி கோவில் சித்திரை விழா, 13ம் தேதி வாஸ்து சாந்தி ஹோமத்துடன் துவங்கியது. 14ம் தேதி ருத்ர அபிஷேகம், பொங்கலும், 15ம் தேதி நாகர் பொங்கலும், 16ம் தேதி கருப்பணஸ்வாமி பொங்கல், தம்பிக்கலை ஐயனுக்கு அபிஷேகம் நடந்தது. கடந்த, 17ம் தேதி தம்பிக்கலை ஐயனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனை நடந்தது. 18ம் தேதி உற்சவ மூர்த்திகள் வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. 23ம் தேதி மறுபூஜையும், மாலையில் தெப்போற்சவமும் நடக்கிறது.