ஆனாங்கூர் கோவிலில் 12ம் தேதி கும்பாபிஷேகம்
விழுப்புரம்: ஆனாங்கூர் கிராமத்தில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 12ம் தேதி நடக்கிறது. விழுப்புரம் அடுத்த ஆனாங்கூர் கிராமத்தில் காமாட்சி அம்மன் சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், ஜூன் 12ம் தேதி நடக்கிறது. காமாட்சி அம்மன் சமேத அகஸ்தீஸ்வரர், விநாய கர், முருகன், மகாவிஷ்ணு, நவக்கிரஹம், துர்கை, தட்சிணாமூர்த்தி, நந்திகேஸ்வரர், அரசு-வேம்பு நாகராஜன், சண்டிகேஸ்வரர், பைரவர், பரிவார சுவாமிகள் மற்றும் காமாட்சி அம்மன் விமானம், அகஸ்தீஸ்வரர் விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மயிலம் பொம்மபுரம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள், கல்பட்டு பிரமானந்த அவதூத சுவாமிகள் முன்னிலையில், காலை 10:30 மணி முதல் 11:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டி செயலாளர் கணேசன், கோவில் அர்ச்சகர் அழகேச குருக்கள், சுப்ரமணிய சிவாச்சாரியார், கணேச சிவாச்சாரியார், ஸ்தபதி அய்யனார் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.