உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபிசெட்டிபாளையம் மசிரி மாரியம்மன் கோவில் விழா

கோபிசெட்டிபாளையம் மசிரி மாரியம்மன் கோவில் விழா

கோபிசெட்டிபாளையம்: கோபி மசிரிமாரியம்மன் கோவிலில் இன்று குண்டம் விழா நடக்கிறது. கோபி வீரபாண்டி கிராமம் புகழேந்தி வீதியில் உள்ள மசிரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா, எட்டாம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கம்பம் நடுதல், சந்தனகாப்பு நடந்தன. நேற்று மாவிளக்கு பூஜை, பட்டுபோர்த்தி ஆடுதல், கரகம் ஆடுதல், குண்ட பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தன. இன்று காலை, ஆறு மணிக்கு குண்டம் இறங்குதல், காலை, 11 மணிக்கு அக்னி அபி ஷேகம், இரவு, 10 மணிக்கு வாண வேடிக்கையுடன் மலர் பல்லக்கில் அம்மை அழைத்தல் நடக்கிறது. நாளை காலை, ஆறு மணிக்கு அரண்மனை பொங்கல், காலை, எட்டு மணிக்கு மாவிளக்கு, ஒன்பது மணிக்கு சந்தியா வனத்துறையில் இருந்து பால்குடம், சிவன், சக்தி குடம் எடுத்து வருதல் நடக்கிறது. கருப்பராயன் சாமிக்கு கிடாய் வெட்டுதல், இரண்டு மணிக்கு பெரும் பூஜை, நான்கு மணிக்கு கோபி மாகாளியம்மன் கோவிலில் இருந்து அக்னி கும்பம் மற்றும் அலகு குத்தி வருதல், எட்டு மணிக்கு கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 23ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், 24 தேதி மறுபூஜையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !