மயிலம் கோவிலில் சஷ்டி வழிபாடு
ADDED :4158 days ago
மயிலம்: மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி திருக்கோவிலில் சஷ்டி விழா நடந்தது. நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. காலை 11 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பிற்பகல் 1 மணிக்கு கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு மலர்களினால் அலங்கரித்த உற்சவர் கிரிவலம் நடந்தது.