மசிரி மாரியம்மன் கோவில் குண்டம் இறங்கி நேர்ச்சை!
ADDED :4206 days ago
கோபிசெட்டிபாளையம்: கோபி, மசிரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், குண்டம் இறங்கி, நேர்த்தி கடன் செலுத்தினர். கோபி வீரபாண்டி புகழேந்தி வீதியில் மசிரி மாரியம்மன், கருப்பராயன் கோவில் அமைந்துள்ளது. குண்டம் திருவிழா, எட்டாம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கம்பம் நடுதல், சந்தனகாப்பு, மாவிளக்கு பூஜை, பட்டு போர்த்தி ஆடுதல், கரகம் ஆடுதல், குண்ட பொங்கல் நிகழ்ச்சி நடந்தன. குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, நேற்று அதிகாலை நடந்தது. மொடச்சூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி, தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.