உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்!

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்!

தஞ்சாவூர்: தஞ்சை நகரத்திலுள்ள, ஷியாமளாதேவி அம்மன் கோவிலில் இருந்து தஞ்சையை அடுத்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு பல நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் பால் குடம் ஏந்தி, ஊர்வலமாக சென்றனர். தஞ்சை நகரத்தில், வடக்குவீதியிலுள்ள ராணிவாய்க்கால் தெருவில், ஷியாமளாதேவி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஒவ்வொரு வருடமும் தஞ்சையை அடுத்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் ஏந்தி, பக்தர்கள் ஊர்வலமாக பக்தி சிரத்தையுடன் செல்வது வழக்கம். அதன்படி, நடப்பாண்டும், 75வது ஆண்டாக, பல நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் சேர்ந்து, பால்குடம் எடுத்துக்கொண்டு, நேற்று முன்தினம் ஊர்வலமாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். முன்னதாக, ஷியாமளா தேவி அம்மன் கோவிலில் அபிஷேக ஆராதனை, கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாலை 6 மணிக்கு மணிமுத்தா நதிக்கரையிலிருந்து வெள்ளிக்கரகம் ஊர்வலமாக புறப்பட்டது. இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !