உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி கோயில் தற்காலிக உண்டியல் வசூல் ரூ.11 லட்சம்!

வீரபாண்டி கோயில் தற்காலிக உண்டியல் வசூல் ரூ.11 லட்சம்!

தேனி : வீரபாண்டி கோயிலில், திருவிழாவிற்கு அமைக்கப்பட்ட தற்காலிக உண்டியல்கள் திறக்கப்பட்டன. இதில் பக்தர்கள் 11 லட்சத்து 379 ரூபாய், காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா, கடந்த 6 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள், அக்னிசட்டி, ஆயிரங்கண் பானை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழாவில், பத்து நிரந்தர உண்டியல் தவிர, 22 தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டிருந்தன. தற்காலிக உண்டியல் எண்ணும் பணி நேற்று காலை நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், ஆய்வாளர் பாண்டிய ராணி முன்னிலையில், வீரபாண்டி சவுராஷ்டிரா ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள், கோயில் பணியாளர்கள், கிராம மக்கள் இணைந்து உண்டியல் தொகையை எண்ணினர். இதில், 11 லட்சத்து 379 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர், என கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ் தெரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !