திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: ரூ.10 லட்சம் செலவில் திருப்பணி!
ADDED :4157 days ago
ஆர்.கே.பேட்டை : ஆர்.கே.பேட்டை அடுத்த, செல்லாத்தூர் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம், ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது.கிராம மக்களின் பங்களிப்புடன், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், கோவில் சீரமைப்பு திருப்பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகின்றன. தற்போது பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதையடுத்து, வரும் 4ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, 5ம் தேதி பாரத கொடியேற்றமும், 12ம் தேதி பகாசூரன் கும்பமும் நடக்கிறது. அன்று முதல், தினசரி மகாபாரத தெருக்கூத்து நிகழ்ச்சியும், 22ம் தேதி தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகம் நடத்திய பிறகே, விழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்து இருந்ததால், கடந்த ஏழு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த திருவிழா, இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடக்கிறது.