உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் மாரியம்மன் கோவிலில் நகராட்சி சார்பில் மண்டகப்படி!

கரூர் மாரியம்மன் கோவிலில் நகராட்சி சார்பில் மண்டகப்படி!

கரூர்: தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கரூர் மாரியம்மன் கோவிலில், கடந்த 11 ம் தேதி கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் நடுதலுடன் துவங்கியது. கடந்த 16 ம் தேதி பூச்சொரிதலும், 18 ம் தேதி பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகளும் நடந்தது. தொடர் ந்து நாள்தோறும், கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபராதனை மற்றும் திருவீதி உலா நடந்து வருகிறது. ஆண்டுதோறும் கரூர் நகராட்சி சார்பில், மாரியம்மன் கோவிலில் மண்டகப்படி விழா நடந்து வருகிறது. நடப்பாண்டு நேற்று காலை, 11.30 மணிக்கு, 38 வது மண்டகப்படி விழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று காலை, 7.15 மணிக்கு பல்லாக்கு, 10.30 மணி க்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, 12.30 மணிக்கு ஸ்ரீ ஐயப்பா சேவா சங்க மண்டப்பத்தில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகராட்சி தலைவர் செல்வராஜ், நகராட்சி துணைத் தலைவர் காளியப்பன் உட்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !