உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரேஸ்வரி அம்மன் கோயில் கொடைவிழா!

பத்ரேஸ்வரி அம்மன் கோயில் கொடைவிழா!

நார்கோவில் : ஆரல்வாய்மொழி தாணுமாலையன்புதூர் வெள்ளார் சமுதாய துர்கா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 20-ம் தேதிநடந்து முடிந்தது. இப்போது 41 நாட்கள் மண்டல பூஜை நடந்து வருகிறது. மண்டல பூஜையை முன்னிட்டு வரும் 30-ம் தேதி இரவு 10 மணிக்கு குடி அழைப்பு, மாக்காப்பு அலங்கார தீபாராதனை, 8 மணிக்கு அகலிகை. ஊற்றிலிருந்து பால்குடம். முளைப்பாரி எடுத்து ஊர்வலம், மதியம் 12 மணிக்கு கும்பபூஜை, கும்பாபிஷேகம் நடக்கிறது. பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 350 பொங்கல் இடுதல், இரவு 11 மணிக்கு அலங்கார தீபாராதனை, பூப்படைப்பு. அன்னபடைப்பு ஆகியன நடைபெறும். 1-ம் தேதி காலை 9 மணிக்கு நையாண்டி மேளம், மதியம் 12 மணிக்கு தீபாராதனை, பூப்படைப்பு, 1 மணிக்கு மஞ்சல் நீராடுதல், மாலை 3 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் பவனி ஆகியன நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டி செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !