திருவண்ணாமலை உண்டியல் காணிக்கை ரூ.78 லட்சம்!
ADDED :4156 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு ஒரு மாதத்தில் பக்தர்கள் ரூ.78 லட்சம் காணிக்கை செலுத்தி உள்ளனர். பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, மே மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள், பக்தர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.78 லட்சத்து 19 ஆயிரத்து 175 ரொக்கம், 140 கிராம் தங்கம், 1,250 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.