பத்திரகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா!
ADDED :4155 days ago
ஆண்டிபட்டி: பத்திரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா செவ்வாய்கிழமை முதல் வியாழக்கிழமை வரை நடைபெற்றது. ஆண்டிபட்டி பத்திரகாளியம்மன் கோயிலில் கடந்த மே 20-ல் பொங்கல் திருவிழா தொடங்கியது. முதல் நாள் விழாவில் அம்மன் கரகம் செய்யப்பட்டு, பெண்கள் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.