உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலபைரவர் கோவிலில் திருக்கல்யாணம்!

காலபைரவர் கோவிலில் திருக்கல்யாணம்!

கத்திரிப்புலம்: வேதாரண்யத்தை அடுத்ந்த கத்திரிப்புலத்தில் காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பைரவர், பைரவிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இந்த ஆண்டும் செல்வ சித்தி வினாயகர் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பைரவருக்கு பால் அபிசேகமும், மகா சங்காபிசேகமும் செய்து, சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் பைரவருக்கும் - பைரவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !