சவுமிய தாமோதரப் பெருமாள் கோயிலில் நாச்சியார் உலா!
ADDED :4204 days ago
சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் சவுமிய தாமோதரப் பெருமாள் கோயிலில் உள்ளது. இத்தலத்தில் சுவாமியை குழந்தைக்கண்ணனாகவே பாவித்து வழிபடுகிறார்கள். மூலவர், உற்சவர் இருவரின் இடுப்பிலும் கயிறு அழுந்திய தடம் இருக்கிறது. இக்கோயிலில் வைகாசியில் பிரம்மோற்ஸவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடைபெற்றுவரும் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பல்லக்கில் வலம் வந்து நாச்சியார் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.