உத்திராபதியார் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு!
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளையில் பிரசித்தி பெற்ற உத்திராபதியார் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் தினமும் மாலை 6.00 மணிக்கு, உத்திராபதியார் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. 48 நாட்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி மாலை 4.00 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் பாலபிஷேகம் நடந்தது. இரவு 9.00 மணிக்கு சுவாசிக்கு புனித நீர் ஊற்றி மண்டலபிஷேக நிறைவு விழா நடந்தது. விழாவில் 500 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 10.00 மணிக்கு உத்திராபதியார் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.