சிலுவைபுரம் புனித லூர்து அன்னை ஆலய தேர்பவனி!
ADDED :4513 days ago
சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த சிலுவைபுரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் ஆண்டு தோறும் தேர்பவனி நடப்பது வழக்கம். இந்த வருடம் ஆண்டுப் பெருவிழா விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சிறப்பு விழாவான ஆடம்பர தேர்பவனி கடந்த 24ம் தேதி இரவு நடந்தது. தேர் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்தது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தைகள் சூசை, இம்மானுவேல், அந்தோனி மற்றும் பொதுமக்கள் பலர் செய்தனர்.