உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மவுன சுவாமி மடாலயத்தில் குரு பூஜை விழா!

மவுன சுவாமி மடாலயத்தில் குரு பூஜை விழா!

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீ மவுன சுவாமி மடாலயத்தில் நடந்த குரு பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் சீர்காழி மெயின்ரோட்டில் உள்ள ஸ்ரீ மவுன சுவாமி மடாலயத்தில் @நற்று நடந்த குரு பூஜையில் சிறப்பு அபிஷேகம், பூஜை, ஆராதனை நடந்தது. பூஜைகளை மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள் செய்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விரிவுரையாளர் பாலசுப்ரமணியன் பஞ்ச புராணம் பாடினார். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிதம்பரத்தை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !