உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சாமி தரிசனம்!

பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சாமி தரிசனம்!

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி அனில் ஆர் தாவே, சாமி தரிசனம் செய்தார். பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, சுப் ரீம் கோர்ட் நீதிபதி அனில் ஆர் தாவே, நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு, தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். நீதிபதிக்கு, அறங்காவ லர் குழு தலைவர் வெங்கடசலம், செயலாளர் கணேசன், பொருளாளர் கல்விக்கரசன் ஆகியோர் பூரணகும்ப மரியாதையு டன் வரவேற்பு அளித்தனர். மூலநாதர், வேதாம்பிகையம்மன், பாலவிநாயகர், பொங்கு சனீஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளை நீதிபதி அனில் ஆர் தாவே வழிபட்டார். பின்பு, தல வரலாறு குறித்து கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !