உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொம்மபுர ஆதீன மடத்தில் திருக்குட நன்னீராட்டு விழா!

பொம்மபுர ஆதீன மடத்தில் திருக்குட நன்னீராட்டு விழா!

புதுச்சேரி: பொம்மையார்பாளையம் மயிலம் பொம்மபுர ஆதீன சிவஞான பாலய சுவாமிகள் மடத்தின் திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு, நேற்று சிறப்பு யாகம் நடந்தது. பொம்மையார்பாளையம் மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்தில், ஆதி சிவஞான பாலய சுவாமிகள் சிவயோக ஜீவசமாதி, பாலசுப்ரமணியர், ஆதீன 3, 14, 15, 16, 17ம் பட்டம் குருமகா சந்நிதானங்களின் சிவயோக சமாதிகள் புதுப்பிக்கப்பட்டு, 18, 19ம் பட்டம் குருமகா சந்நிதானங்களின் சிவயோக சமாதிகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இதற்கான திருக்குட நன்னீராட்டு விழா, நேற்று முன்தினம் காலை மகா கணபதி யாகம், நவகிரக யாகம், கோ பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை கோ பூஜை, தன பூஜை, சுவாசினி பூஜை, லட்சுமி விசேஷ கமல யாகம் நடந்தது. பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு, மயிலம் பொம்மபுரம் ஆதீன சிவஞான பாலய சுவாமிகள் மஞ்சள், குங்குமம், வளையல், புடவையை பிரசாதமாக வழங்கினார். நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இன்று, கோ பூஜை, ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் வழிபாடு நடக்கிறது. நாளை (29ம் தேதி) யாகசாலை பிரவேசம் நடக்கிறது. 30ம் தேதி இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. 31ம் தேதி நான்காம் கால யாக பூஜை நடக்கிறது. 1ம் தேதி  காலை 8:15 மணிக்கு கடங்கள் புறப்பட்டு, 9:00 மணிக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !