உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்கி சிற்பங்கள் சேதம்!

சிவன் கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்கி சிற்பங்கள் சேதம்!

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோவில் கோபு ரத்தில் மின்னல் தாக்கியதில் சிற்பங்கள் சேதமடைந்தன. திருவெண்ணெய்நல்லூரில் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சுந்தரரை தடுத்தாட் கொண்டு அருளாசி வழங்கிய சிறப்புடையது. நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, இப்பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது.  அப்போது கோவில் கோபுரத்தின் தெற்கு பகுதியில் மின்னல் தாக்கியதில் சிற்பங்கள் சேதமடைந்து கீழே விழுந்தன. இத்துடன் கோபுரத்தில் செடிகள் முளைவதாலும், சிற்பங்கள் உடைந்து விடுகிறது. சேதமடைந்த சிற்பங்களை சீரமைத்திட, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !