உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உளுந்தூர்பேட்டை கோவிலில் பா.ஜ.,வினர் சிறப்பு வழிபாடு!

உளுந்தூர்பேட்டை கோவிலில் பா.ஜ.,வினர் சிறப்பு வழிபாடு!

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீகைலாசநாதர் சுவாமி கோவிலில் பா.ஜ.,வினர்  சிறப்பு பூஜைகளை நடத்தினர். பிரதமராக பதவியேற்ற நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சி சிறப்புடன் நடக்க வேண்டு,  உளுந்தூர்பேட்டை ஸ்ரீகைலாசநாதர் சுவாமி கோவிலில் பா.ஜ., சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் தேசிய குழு உறுப்பினர் முத்துகுமாரசாமி தலைமை தாங்கினார். முன்னாள் மாநில இளைஞரணி நிர்வாகி பாலாஜி, மாவட்ட செயலாளர் கஜேந்திரன், வழக்கறிஞரணி மாவட்ட தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் பாதூர் கண்ணன், வர்த்தர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் பழனிவேல், குருமூர்த்தி, அண்ணாமலை, ஒன்றிய தலைவர் அரிகோவிந்தன், பொதுச்செயலாளர் முருகவேல், விவசாய அணி நிர்வாகி திருமேனி, ஒன்றிய துணை தலைவர்கள் செல்லதுரை, பிரகாஷ், ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !