உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சேரி மாரியம்மன் கோவில் தேரோட்டம்

செஞ்சேரி மாரியம்மன் கோவில் தேரோட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தில், மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. செஞ்சேரியில் மாரியம்மன், செல்லியம்மன், காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த, 24ம் தேதி பூச்சொரிதலுடன் துவங்கியது. தினமும், ஸ்வாமி அலங்கரிக்கப்பட்டு, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். நேற்று முன்தினம், அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், அக்னிசட்டி ஏந்துதல், அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. எம்.பி., மருதராஜா, யூனியன் சேர்மன் ஜெயக்குமார், மாவட்ட கவுன்சிலர் வடிவேல், கவுல்பாளையம் ஊராட்சி தலைவர் செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர் கைலாயி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கோபால் உட்பட சுற்று வட்டார கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !