மேல்மலையனூர் கோவிலில் ரூ. 38 லட்சம் உண்டியல் வசூல்!
ADDED :4338 days ago
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் 38 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தியிருந்தனர். மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று இரவு 8.30 மணிவரை நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் பிரகாஷ், திருவண்ணாமலை வேதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 38 லட்சத்து 23 ஆயிரத்து 686 ரூபாய் ரொக்கமும், 256 கிராம் தங்க நகையும், 410 கிராம் வெள்ளி நகையையும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இந்நிகழ்ச்சியின் போது கோவில் அறங்காவலர் குழு தலைவர் சரவணன், அறங்காவலர்கள் ஏழுமலை, பெருமாள், காசி, சின்னத்தம்பி, வடிவேல், சேகர், மேலாளர் முனியப்பன் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.