ஆந்திராவில் ஸ்ரீனிவாச கல்யாணம் மீண்டும் துவங்க முடிவு!
ADDED :4156 days ago
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஸ்ரீனிவாச கல்யாணங்களை, மீண்டும் துவக்க உள்ளது. ஆந்திராவில், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, தேவஸ்தானம், ஸ்ரீனிவாச கல்யாணங்களை, கடந்த இரண்டு மாதங்களாக, நிறுத்தி வைத்துஇருந்தது. தற்போது, விதிகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், ஜூன் மாதம் முதல், மீண்டும் ஸ்ரீனிவாச கல்யாணங்ளை, ஆந்திராவில், ஒன்பது இடங்களில் நடத்த, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மேலும், இதற்கான முழு பொறுப்பையும், கல்யாணம் உற்சவ ஊழலில் சிக்கிய ராமசந்திரா ரெட்டியிடம் மீண்டும், தேவஸ்தான அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.