உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் 34ம் ஆண்டு செடல் உற்சவம்!

முத்துமாரியம்மன் கோவிலில் 34ம் ஆண்டு செடல் உற்சவம்!

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கொக்குப்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் 34ம் ஆண்டு செடல் உற்சவம் நடந்தது. பண்ருட்டி அடுத்த கொக்குப்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் 34ம் ஆண்டு செடல் உற்சவம் நடந்தது. விழா முன்னிட்டு கடந்த 16ம்தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது. 18ம் தேதி பாலாபிஷேகமும், கடந்த 23ம்தேதி செடல் உற்சவமும் நடந்தது. விழாவில் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்றுமுன்தினம் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. நேற்று மாலை கரகம் விடுதல், தெருக்கூத்து நடந்தது. வரும் 30ம் தேதி மாலை 4  மணிக்கு திருவிளக்கு பூஜையும், அன்னாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !