உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!

வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!

கடலூர்: கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் வில்வநகர் ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீஆட்கொண்ட வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணிகள் செய்து முடிந்து நாளை (30ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி கடந்த 27ம் தேதி மாலை அனுக்ஞை, சங்கிரஹனம், அங்குரார்பணம், வாஸ்து சாந்தியும், 28ம் தேதி ஆச்சார்ய ரஷபந்தனம், முதல் கால பூஜை நடந்தது. பகல் 12:00 மணிக்கு பூர்ணாகுதி, சாற்றுமறை, நேற்று 2ம் கால பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், 29ம் தேதி காலை உத்சவமூர்த்திகள் கர்மாங்க ஸ்நபன திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு கோ பூஜை, திருமஞ்சனம் நடக்கிறது. நாளை (30ம் தேதி) காலை 5:00 மணிக்கு மகாபூர்ணாகுதி, யாத்ராதானம், கடங்கள் புறப்பாடாகி, 9:00 மணிக்கு மகா சம்ப்ரோஷணம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ஸ்ரீ ஆட்கொண்ட வரதராஜ பெருமாள் புஷ்ப விமானத்தில் வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !