மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா!
ADDED :4146 days ago
சேலம்: நரசிங்கபுரம் மகாசக்தி மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழாவையொட்டி, நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. விழாவானது கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் இந்த விழாவில், புதன்கிழமை மஞ்சள் நீர், பால்குடம் ஊர்வலம், தீச்சட்டி எடுத்தல், பூங்கரகம், அலகு குத்துதல் ஆகியவை நடைபெற்றது.