உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னமனூர் காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா!

சின்னமனூர் காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா!

சின்னமனூர் : சின்னமனூர் கருங்கட்டான்குளத்தில் காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா நடந்தது. கரகம், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து மாவிளக்கு முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெரியாற்றில் கரைக்கப்பட்டது. இரவில் இளைஞர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மறவர் முன்னேற்ற சங்க தலைவர் தவமணிராமச்சந்திரன், துணைத் தலைவர் சுருளி, செயலாளர் மணி, பொருளாளர் சிவானந்தம் மற்றும் நிர்வாகிகள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !