உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள்மலை திருவிழா ஜூன் 3ல் துவக்கம்

பெருமாள்மலை திருவிழா ஜூன் 3ல் துவக்கம்

துறையூர்: துறையூர் பெருமாள் மலை தேர்திருவிழா, ஜூன், 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. துறையூர் பெருமாள் மலை தேர்திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும். ஜூன், 3ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும், பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி ஸ்வாமி கிரிவல பாதையில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஜூன், 11ம் தேதி அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்வாமி ஊர்வலம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !