உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா

திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா

பள்ளிப்பட்டு : தெலுங்கு மொழி கதாகாலட்சேபத்துடன் நடந்து வந்த அக்னி வசந்த உற்சவத்தில், நேற்று முன்தினம், தீமிதி திருவிழா நடந்தது.பள்ளிப்பட்டு ஒன்றியம், நொச்சிலி ஊராட்சியைச் சேர்ந்தது எகுவமிட்டூர் கிராமம். ஊருக்கு வெளியே அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது திரவுபதியம்மன் கோவில். இந்த கோவிலில், கடந்த மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன், அக்னி வசந்த உற்சவம் துவங்கியது. தெலுங்கு மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதி என்பதால், தெலுங்கு மொழியில், மகாபாரத சொற்பொழிவு நடந்து வந்தது. கடந்த 28ம் தேதி அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும் நடந்தது. மாலையில், தீமிதி திருவிழா நடந்தது. இதில், நொச்சிலி, எகுவமிட்டூர், வெங்கடாபுரம், கீச்சலம், விஜயமாம்பாபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், காப்பு கட்டி தீ மிதித்தனர். நேற்று காலை தர்மராஜா பட்டாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !