தண்டலம் துலுக்காணத்தம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா
ADDED :4151 days ago
தண்டலம் துலுக்காணத்தம்மன் கோவிலில், தீமிதி விழா நேற்று முன்தினம் நடந்தது. திருப்போரூர் அடுத்த, தண்டலம் துலுக்காணத்தம்மன் கோவிலில், 12ம் ஆண்டு தீமதி திருவிழா, கடந்த 28ம் தேதி விநாயகர் பூஜை, காப்பு கட்டுதலுடன் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 2: மணிக்கு கூழ்வார்த்தல் மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இரவு 10:00 மணியளவில் அம்மன் அலங்காரத்தில் வீதி <உலா வந்தார். நேற்று கும்பம் வீதி உலா மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது.