விருத்தாசலம் சுப்ரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேம்!
விருத்தாசலம்: விருத்தாசலம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். விருத்தாசலம் வடக்கு வீரபாண்டியன் தெரு, வள்ளி தெய்வாணை சமேத சுப்ரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை 7:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, லட்சுமி பூஜை, நவக்கிரக பூஜைகளுடன் துவங்கியது. மாலை வாஸ்துசாந்தி, பிரவேச பலி, முதல்கால யாகபூஜை, மகா பூர்ணாகுதி தீபாராதனை, அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 9:00 மணிக்கு பூர்ணாகுதி, கடம்புறப்பாடு நிகழ்ச்சியுடன் 9:30 மணியளவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கணபதி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணுதுர்கை, மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இரவு சுப்ரமணியர் சுவாமி வீதியுலா நடந்தது.