மயிலாடுதுறை ஆழிகாட்டி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்!
ADDED :4145 days ago
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தேவார பாடல் பெற்ற ஸ்ரீ மயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலை சுற்றியுள்ள தேர் வீதியின் 4 மூலைகளிலும் சோழ மன்னர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வினாயகர் கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான ஆழிகாட்டி வினாயகர் கோயில் திருப்பணிகள் சமீபத்தில் முடிந்ததையடுத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2ம் தேதி யாகசாலை பூஜை தொடங்கி காலை 4ம்கால பூஜையுடன் முடிந்து பூர்ணாஹூதி மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டது.11:10 ம ணிக்கு திருவாவடுதுறை ஆதினகட்டளை சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிக ள் முன்னிலையில் சாமிநாத சிவாச்சாரியார் வினாயகர் சன்னதி விமானத்தில் புனித நீர் ஊ ற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இதில் திரளான பக்த ர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.