நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி கோயிலில் வைகாசித்திருவிழா!
ADDED :4193 days ago
சிவகங்கை: பிரசித்தி பெற்ற நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயிலில் வைகாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தன. வைகாசி பெருவிழாவில் இன்று காலை வெள்ளி கேடகம் வாகனத்திலும், மாலை சிம்ம வாகனத்திலும் கண்ணுடையநாயகி அம்மன் பவனி நடைபெறுகிறது.