கெங்கவரம் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :4149 days ago
செஞ்சி: செஞ்சி தாலுகா கெங்கவரம் நடுத்தெரு ஆதிவிநாயகர் கோவில் மூன்றாவது அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வரும் 9ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வரும் 7ம் தேதி காலை 8.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, மாலை 4.30 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜைகள் நடக்கின்றன. 8ம் தேதி காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 11 மணிக்கு அஷ்ட பந்தனம் சாற்றுதலும், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. 9ம் தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, 6.30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, கலச புறப்பாடு, 6.40 மணிக்கு மூலவர் விமானம் மகா கும்பாபிஷேகம், 7 மணிக்கு கருவறையில் உள்ள ஆதி விநாயகருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கெங்கவரம் கிராம மக்கள் செய்துள்ளனர்.