பெருந்துறை சோழீஸ்வரர் கோவில்: வரும் 8ம் தேதி கும்பாபிஷேக விழா!
பெருந்துறை: பெருந்துறை, வேதநாயகி உடனமர் சோழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும், எட்டாம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, இன்று, (5ம் தேதி) காலை, 9.05 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, தீர்த்த ஸங்க்ரஹணம், மாலை, 5 மணிக்கு யாக சாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை துவங்குகிறது. ஆறாம் தேதி காலை, 8.30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை. மாலை, 5 மணிக்கு, மூன்றாம் காலயாக பூஜை, ஏழாம் தேதி காலை, 8.30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, மாலை, 5 மணிக்கு, ஐந்தாம் கால யாக பூஜை நடக்கிறது. வரும், எட்டாம் தேதி, அதிகாலை, 4 மணிக்கு, ஆறாம் கால யாக பூஜை, கலசங்கள் புறப்பாடு, காலை, 5.45 மணிக்கு வேதநாயகி உடனமர் சோழீஸ்வரர் விமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவார விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்று மாலை, நான்கு மணிக்கு, மஹா அபிஷேகம், மஹா தீபாராதனையும், இரவு ஏழு மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் மற்றும் திருவீதி உலா நடக்கிறது. ஒன்பதாம் தேதி முதல், மண்டல பூஜைகள் துவக்கி நடக்க உள்ளது.