திருக்கோவிலூர் ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா
ADDED :4149 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்று வரும் ராமநவமி உற்சவத்தில் ஆஞ்சநேயர் முத்தங்கி சேவையில் அருள்பாலித்தார். திருக்கோவிலூர் கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சத்சங்கம் சார்பில் 49 வது ஆண்டு ராம நவமி விழா கடந்த மாதம் 25ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியாக பரனூர் கிருஷ்ணப்ரேமி சுவாமிகளின் உபன்யாசம் தினசரி இரவு 7 மணிக்கு நடந்தது. நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு ஆஞ்சநேயர்க்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. மாலை 6 மணிக்கு முத்தங்கி சேவை, லட்சார்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு திவ்யநாம பஜனை நடந்தது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடக்கும் விழாவிற்கான ஏற்பாடு களை சத்சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.