உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் முருகன் வைகாசி விசாக திருவிழா: ஏற்பாடுகள் தீவிரம்!

திருச்செந்தூர் முருகன் வைகாசி விசாக திருவிழா: ஏற்பாடுகள் தீவிரம்!

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயிலில் ஜூன் 11 ல் வைகாசி விசாக திருவிழா நடக்கவுள்ளதால், ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருச்செந்தூரில் நடைபெற உள்ள வைகாசி விசாக திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து கோயிலுக்கு பால் குடம் எடுத்து வருவர். பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர், தடையின்றி மின்சாரம் வழங்கவும், தொலைபேசி, மொபைல் போன் இணைப்புகள் கிடைக்க, தற்காலிக டவர் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு தொற்று நோய் வராமல் பாதுகாக்க, சுகாதாரத்துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !