விருத்தாசலம் சுப்ரமணியர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!
ADDED :4150 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் சுப்ரமணியர் சுவாமி கோவில் திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். விருத்தாசலம் வடக்கு வீரபாண்டியன் தெரு, வள்ளி தெய்வாணை சமேத சுப்ரமணியர் சுவாமி கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து கணபதி, சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணுதுர்கை மற்றும் பரிவார தேவதைகளுக்கு தீபாராதனை நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, வள்ளி தெய்வாணை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்பு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.