உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணம் குரு ஸ்தலத்தில் 11ம் தேதி குருப் பெயர்ச்சி ஹோமம்!

கும்பகோணம் குரு ஸ்தலத்தில் 11ம் தேதி குருப் பெயர்ச்சி ஹோமம்!

கும்பகோணம்: கும்பகோணம் அருகே, மதுரை ஆதினத்துக்கு சொந்தமான திருப்புறம்பயத்தில், சாட்சிநாத ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இத்தலம், குரு ஸ்தலம் என போற்றப்படுகிறது. தெட்சிணாமூர்த்தி என்ற குருவடிவமே திருபுறம் பயத்திலிருந்து தான் தோற்ற மாயிற்று, என தேவார பாடல் தெரிவிக்கிறது. சிவாலயங்களில், கருவறை வெளிச்சுவரில் தென்முகம் நோக்கி தெட்சிணாமூர்த்தி அமர்ந்து அருள் புரிவதை காணலாம். ஆனால், புகழ்பெற்ற இக்கோவில் குரு ஸ்தலமாக திகழ்வதால், கோவிலின் ராஜகோபுரத்திற்கு வெளியே தெட்சிணாமூர்த்தி, தனிக்கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இக்கோவிலில், குரு பகவான் மிதுனராசியிலிருந்து கடக ராசிக்கு வரும், 13ம்தேதி மாலை, 5.54 மணிக்கு பிரவேசம் அடைகிறார். இதை முன்னிட்டு, அன்று காலை, 8 மணி முதல் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. வரும், 11ம் தேதி மாலை, 5 மணியளவில் குரு பெயர்ச்சி பரிகார ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனை களும் நடைபெறுகிறது. 12ம் தேதி காலை, 7 மணிக்கு மேல் ஏகதின லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகத்துடன் இணைந்து குருபகவான் வார வழிபாட்டுக் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !