உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூசாரிபட்டி முத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

பூசாரிபட்டி முத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

குஜிலியம்பாறை : பூசாரிபட்டியில் முத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஒக்கலிக்கர் காப்பு கரவனவார் குலத்திற்கு பாத்தியப்பட்ட முத்தம்மன் கோயிலில் விநாயகர் பூஜை, கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. இரண்டாம் கால பூஜை, அஷ்ட பந்தனம் சாற்றுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நேற்று காலை, நான்காம் கால ஹோமத்தை தொடர்ந்து, காலை 7.35 மணிக்கு மேல், 8.10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் நிர்வாக தலைவர் பிச்சைமுத்து, துணை தலைவர் நரசிம்மன், செயலாளர் ராமசாமி, பொருளாளர் மணிமுத்து, கோயில் "கரை நிர்வாகிகள் ராமசாமி, பெருமாள், முத்துச்சாமி, பி.ராமசாமி, எஸ்.பெருமாள், எம்.முத்துச்சாமி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். கோவை ஸ்ரீவிஜயலட்சுமி அறக்கட்டளை நிறுவனர் ஆறுமுகசாமி, வேடசந்தூர் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கவிதா, மாவட்ட கவுன்சிலர் சவடமுத்து, ஆத்தூர் பிள்ளையூர் பெருமாள், ரெங்ககவுண்டன்புதூர் சின்னக்காளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !