விருதுநகர் விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்!
ADDED :4139 days ago
விருதுநகர் : விருதுநகர் பெரியவள்ளிக்குளம் தனசாமி பரிமளாதேவி சமூக நல டிரஸ்ட், முதியோர் இல்லத்தில் உள்ள பிரசன்ன விநாயகர் கோயில் மற்றும் தனசாமி பரிமளா தேவி அரங்கத்தில் உள்ள தனசித்தி விநாயகர் கோயிலில், அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடந்தது. விமான கோபுர கும்பாபிஷேகம், மூலஸ்தான கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முதியோர் இல்ல நிர்வாகிகள், உறுப்பினர்கள், விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சுப்பையா பட்டர், நிர்வாகிகளுக்கு பரிவட்டம் கட்டினார். நன்கொடையாளர்களுக்கும் பட்டாடை அணிவித்து மரியாதை செய்தார்.